இந்தியா

டெல்லி வருகிறார் அபுதாபி இளவரசர்

டெல்லி வருகிறார் அபுதாபி இளவரசர்

webteam

நாட்டின் 68-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அபுதாபி இளவரசர் இன்று டெல்லி வருகிறார்.

நாட்டின் 68-வது குடியரசு தின விழா வரும் 26-‌‌ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது. இவ்விழாவிற்கு அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இதில் பங்கேற்பதற்காக அவர் இன்று டெல்லி வருகிறார். நாளை குடியரசு தலைவர் மாளிகையில் அவருக்கு பிரமாண்ட விருந்து அளிக்கப்படுகிறது

இதைத்தொடர்ந்து மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்கு அபுதாபி இளவரசர் செல்கிறார். இந்த நிகழ்வின்போது குடியரசுத் தலைவர் பிர‌‌ணாப் முகர்ஜி, குடியரசு துணை‌த் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அபுதாபி இளவரசரை வரவேற்கின்றனர்.