சபரிமலை
சபரிமலை புதிய தலைமுறை
இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரலாறு காணாத நெரிசல்.. தவிக்கும் பக்தர்கள்.. காரணம் என்ன?

PT WEB

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக, கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது முதல், கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. நாளுக்குநாள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கவே, கூட்டத்தை கட்டுப்படுத்த, திருவிதாங்கூர் தேவசம் போர்டும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. ஐயப்பனை தரிசனம் செய்ய, நள்ளிரவு முதலே பக்தர்கள், சன்னிதானம் பெரிய நடைப் பந்தலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கோயிலில் கூட்டம் அலைமோதுவதால், பக்தர்கள் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் தேவைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தித் தொகுப்பை இந்த வீடியோவில் காணலாம்.