இந்தியா

ரயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!

ரயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!

webteam

ரயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கொஹைன் தெரிவித்துள்ளார். 

2014 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் கிடைத்த புள்ளிவிவரங்களின் படி இத்தகவல் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்தார். 2014-16 வரை 1607 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கில் தொடர்புடைய 1216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வேயில் குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்துள்ள அமைச்சர், 344 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும் பெண்கள் பெட்டிகளில் பெண் போலீசார் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.