இந்தியா

பாஜகவில் சேர்ந்தார் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி!

பாஜகவில் சேர்ந்தார் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி!

webteam

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா, பாஜகவில் சேர்ந்தார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர், இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா. இவர் மனைவி ரிவபா சோலங்கி. இவர்களுக்கு நித்யானா என்ற பெண் குழந்தை உள்ளது. ஜடேஜாவின் மனைவி ரிவபா, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விழா ஒன்றில் அம்மாநில அமைச்சர், ஆர்.சி. ஃபால்டு முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். 


கடந்த சில மாதங்களுக்கு முன், கர்னிசேனா என்ற அமைப்பின் பெண்கள் பிரிவுத் தலைவியாக, ரிவபா நியமிக்கப்பட்டிருந்தார். இந்த அமைப்பு ’பத்மாவத்’ படத்துக்கு எதிராக கடுமையாகப் போராட்டம் நடத்தியது. இந்நிலையில் அவர் பாஜவில் சேர்ந்துள்ளார்.

ரிவபா, பாஜகவில் சேர்ந்துள்ளது பற்றி ஜாம்நகர் மாவட்ட பாஜக தலைவர் சந்திரேஷ் படேல் கூறும்போது, ‘’ரிவபா கட்சியில் இணைந்தது வியப்பாக இருக்கிறது. ஆனால், அவரால் மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பெறும்’’ என்று தெரிவித்தார்.

கட்சியில் சேர்ந்தது பற்றி ரிவபா கூறும்போது, ‘’பிரதமர் மோடிதான் எனக்கு உந்துசக்தி. அதனால்தான் பாஜக-வில் இணைந்தேன். இந்தக் கட்சி யில் இணைந்ததன் மூலம் மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என நினைக்கிறேன். என் முதல் இலக்கு பெண்களுக்கான அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பதுதான்’’ என்றார்.