கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு கப்பல் அந்தமான் அருகே நடுக்கடலில் மூழ்கியது.
‘ஐடிடி பாந்தர்’ என்ற அந்த சரக்கு கப்பல் அந்தமானிலிருந்து 100 கடல் மைல் தொலைவில் மூழ்கியிருக்கிறது. கப்பலில் இருந்த 11 ஊழியர்களும் உயிர்காக்கும் கவசத்தின் மூலம் தப்பினர். பின்னர் இவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டு அந்தமான் தலைநகர் போர்ட் பிளேருக்கு அழைத்துச் சென்றனர். மூழ்கிய கப்பலில் 500 மெட்ரிக் டன் மணல், 200 மெட்ரிக் டன் ஸ்டீல் ஆகியவை 29 கன்டெய்னர்களில் இருந்துள்ளன. அதோடு ஒரு காரும் அந்தக் கப்பலில் இருந்ததாக தெரியவந்துள்ளது. பறக்கும் கேமரா மீட்பு பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கப்பலைத் தேடும் பணியில் இந்திய கடலோரக் காவல் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.