இந்தியா

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா காலமானார்

webteam

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா உடல்நல குறைவால் காலமானார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குருதாஸ் தாஸ்குப்தா(83). இவர் 25 வருடம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அவற்றில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 2 முறை மேற்கு வங்கத்திலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சமீபத்தில் இருதயம், சிறுநீரக கோளாறு ஆகியவற்றால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை கொல்கத்தாவில் இவர் காலமானார்.