இந்தியா

குளிர்காலத்தில் மாடுகளுக்கு சணல் கோட் ! - அயோத்தி மாநகராட்சி தகவல்

webteam

குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில், அயோத்தியில் உள்ள மாடுகளுக்கு சணலால் உருவாக்கப்பட்ட கோட் தயாரிக்கும் பணியை அம்மாநகராட்சி தொடங்கியுள்ளது

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அயோத்தியின் நகர் நிகாம் ஆணையர் நிராஜ் சுக்லா, “குளிரில் இருந்து பசு மற்றும் காளைகளை காக்க சணலால் தயாரிக்கப்பட்ட கோட் தயாரிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் 3 அல்லது 4 கட்டமாக செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக பைஷிங்பூர் கோசாலையில் உள்ள 100 பசுக்களுக்கு கோட் தயாரிக்க உள்ளோம். ஒரு பசுவுக்கு கோட் தயாரிக்க ரூ.250-300 வரை செலவாகும். நவம்பர் மாத இறுதியில் இந்த கோட்கள் கிடைக்கப்பெறும். காளைகளுக்கான கோட்கள் சணலால் உருவாக்கப்படும். 

பசுவுக்கும், காளைக்கும் தனித்தனி வடிவமைப்புகளில் கோட் தயாரிப்பு இருக்கும். கன்றுகளுக்கு தயாரிக்கப்படும் கோட்கள் 3 அடுக்கில் இருக்கும். சணல் அல்லாமல் உட்புறத்தில் மென்மையான ஆடைகளை பயன்படுத்த கேட்டுள்ளோம். இது கன்றுகளுக்கு வெதுவெதுப்பைத் தரும். அதேபோல் மாடுகள் வெதுவெதுப்பாக தூங்கும் விதமாக தரைகளில் வைக்கோல்களை பரப்பவும் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.