இந்தியா

தீண்டாமை குறித்து ஆர்.எஸ்.எஸ் செயலாளர் சர்ச்சைக்குரிய பேச்சு

தீண்டாமை குறித்து ஆர்.எஸ்.எஸ் செயலாளர் சர்ச்சைக்குரிய பேச்சு

webteam

மாட்டிறைச்சியை உண்பவர்களை பழங்காலத்தில் சமூக ரீதியாக தீண்டத்தகாதவர்களாக இருந்தனர் என்று ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால் தெரிவித்துள்ளார். 

பழங்கால இந்தியா தொடர்பான புத்தக வெளியிட்டு விழா ஒன்று நடைபெற்றது. அதில் ஆர்.எஸ்.எஸ் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால் கலந்து கொண்டார். இவ்விழாவில் இவர் பழங்கால இந்தியா குறித்து உரையாற்றினார். அதில்,  ‘தலித்’ என்ற சொல் ஆங்கிலேயர்களால் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டது. பழங்கால இந்தியாவில் பசு இறைச்சியை உண்பவர்கள் சமூக ரீதியாக தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கிவைக்கப்பட்டனர்.

இதுதான் நாளடைவில் அம்மக்களை ஒதுக்கி வைக்கப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. அதேபோல 8ஆவது நூற்றாண்டில் ராஜா தாஹிரின் ஆட்சி காலத்தில் இஸ்லாமிய மன்னர்களின் வருகையும் தீண்டாமையை அதிகரித்தது. இந்தியாவில் தோன்றிய எந்த மதத்திற்குள்ளும் இந்த வகையான தீண்டாமையை ஆதரிக்கும் நோக்கம் இருந்ததில்லை” எனத் தெரிவித்துள்ளார். மேலும் சில மதங்கள் குறித்தும் இவர் விமர்சித்துள்ளார். இந்தப் பேச்சு இப்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.