இந்தியா

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இருமடங்கு அதிகரிப்பு

webteam

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்கு அதிகரித்து சீரம் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஏற்கெனவே கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.400 எனவும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே இரண்டு தடுப்பூசி நிறுவனங்களுக்கும் மத்திய நிதி தொகுப்பில் இருந்து மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதால் மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியதின் பேரில் மத்திய அரசு நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் ரூ.1,500க்கும், ரஷ்யா மற்றும் சீனாவில் ரூ.750க்கும் கொரோனா தடுப்பூசி விற்பனை செய்யப்படுகிறது. அதன் விலையை ஒப்பிட்டு சீரம் நிறுவனம் தற்போது விலையை கூட்டியுள்ளது. 

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F800759510846500%2F&show_text=false&width=560" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>