கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், உத்தர பிரதேச அமைச்சருமான சேட்டன் சவுகான் கடந்த ஜூலை மாதம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டார்.
தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்த அவருக்கு நேற்று வெண்டிலேட்டர் கருவி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை அவருக்கு சிகிச்சை கொடுத்து வரும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லக்னோவில் உள்ள சஞ்ஜய் காந்தி மருத்துவமனையில் ஜூலை மாதம் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அண்மையில் கிட்னியில் பாதிப்பும், ரத்த அழுத்த நோய் பிரச்சனையும் ஏற்பட்டதை அடுத்து வெண்டிலேட்டர் கருவி பொறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.