கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சூறையாடினர்.
கடந்த சில நாட்களாக டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில், கொரோனா உயிரிழப்பால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அவ்வகையில், ஆக்ராவில், சிகிச்சை பலனின்றி கொரோனா நோயாளிகள் சிலர் உயிரிழந்ததையடுத்து அவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர்.