இந்தியா

மெக்கானிக் கண்டுபிடித்த தனிமனித இடைவெளி பைக் - குவியும் பாராட்டுகள்

மெக்கானிக் கண்டுபிடித்த தனிமனித இடைவெளி பைக் - குவியும் பாராட்டுகள்

webteam

 திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் மெக்கானிக் ஒருவர் தனிமனித இடைவெளியில் அமர்ந்து பயணிக்கும் வகையில் இரு சக்கர வாகனத்தை தயாரித்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவை சேர்ந்தவர் மெக்கானிக் பார்த்தா சாஹா (39). சிறு வயதிலேயே பள்ளிப்படிப்பை கைவிட்ட இவர் பழைய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கி அதன் இன்ஜினை தனியாக பிரித்துள்ளார். பின்னர் அதை 3.2 மீட்டர் நீள கம்பியின் பின்பகுதியில் பொருத்திவிட்டு, அதனுடன் சக்கரங்களை இணைத்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வாகனத்தை உருவாக்கியுள்ளார். இந்த வாகனத்தை செலுத்துபவருக்கும், பின்னால் இருப்பவருக்கும் 1 மீட்டர் இடைவெளி இருக்கிறது.

இது குறித்து பார்த்தா கூறும் போது “ பேட்டரியில் இயங்கக் கூடிய இந்த வாகனம், மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லக்கூடிய திறன் கொண்டுள்ளது. பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான தொகை வெறும் 10 ரூபாய்தான். ஊரடங்கு தள்ர்த்தப்பட்டவுடன் எனது மகளை இந்த வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்லும் திட்டம் இருக்கிறது” என்றார்.

ஏற்கெனவே இதுபோன்று புதிய படைப்புகளைக் கண்டுபிடித்ததற்காக பார்த்தா சாஹாவை, அம்மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.