இந்தியா

கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு பிளாஸ்மா தானம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்: டெல்லி நெகிழ்ச்சி

Veeramani

கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிளாஸ்மா தானம் செய் டெல்லி போலீஸ் எஸ்.. ஆகாஷ்தீப், இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

27 வயதான 21 வார கர்ப்பிணி பெண் டெல்லியின் உத்தம் நகரில் உள்ள மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவி செய்யக்கோரி சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டது. இதனையறிந்துஜீவன் ரக்ஷக்முயற்சியின் கீழ் டெல்லி காவல்துறையினர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகாஷ்தீப் மூலமாக பிளாஸ்மா தானம் செய்ய உதவிசெய்தனர்.

ஜீவன் ரக்ஷக் திட்டம் மூலமாக டெல்லி காவல்துறையினர் பிளாஸ்மா நன்கொடையாளர்களின் டிஜிட்டல் தளத்தினை உருவாக்கி உதவிசெய்து வருகின்றனர். பிளாஸ்மா தானம் செய்த பிறகு, ஆகாஷ்தீப் அந்தப் பெண்ணின் கணவரைச் சந்தித்து நலம் விசாரித்தார். பிளாஸ்மா தானம் செய்த உதவி ஆய்வாளருக்கு பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.