இந்தியா

அசாம் வரும் அனைவருக்கும் 7 நாள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என அறிவிப்பு

அசாம் வரும் அனைவருக்கும் 7 நாள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என அறிவிப்பு

Veeramani

அசாம் மாநிலத்திற்கு வரும் அனைவருக்கும் 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதல் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா “ அசாம் மாநிலத்திற்கு பேருந்து, ரயில் மற்றும் விமானம் மூலமாக வருகைதரும் அனைவருக்கும் 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்படுகிறது. ஒருவேளை கொரோனா இல்லை என்ற முடிவு வந்தாலும் இந்த தனிமைப்படுத்துதல் கட்டாயம். அரசு அலுவல், மருத்துவ காரணங்கள் மற்றும் முக்கிய காரணங்களுக்காக அசாம் வருவபவர்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது” என தெரிவித்தார்

மேலும் மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால், அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் கொரோனா பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தபட்டு அனைவருக்கும் தாமதமின்றி ஆர்டி-பிசிஆர் சோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அசாம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,665 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர், 297 பேர் குணமடைந்துள்ளனர், 5 பேர் உயிரிழந்தனர். இப்போது மாநிலத்தில் 9,048 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர், இதுவரை மொத்தமாக 1,150 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்.