நீதிமன்ற நேரத்தை வீணாக்குவதாகக் கூறி, வழக்குத் தொடுத்தவருக்கு உச்சநீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.
டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி கட்டிடத்தை அருள்மொழி செல்வன் என்பவர் போட்டோ எடுத்தார். அப்போது வங்கி காவலர்கள் அவரை தடுத்தனர். இதையடுத்து தனது அடிப்படை உரிமையை, ரிசர்வ் வங்கி தடுத்துவிட்டது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் விசாரித்தனர். சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகவும் அருள்மொழி செல்வனுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதோடு அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.