இந்தியா

ஷாருக்கான் மகனை அக்டோபர் 7 வரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ஷாருக்கான் மகனை அக்டோபர் 7 வரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Veeramani

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானை அக்டோபர் 7 ஆம் தேதி வரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆர்யன் கானுடன் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு பேரை விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆர்யன் கான் ஜாமீன் கோரியிருந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. முன்னதாக, அக்டோபர் 11 ஆம் தேதி வரை ஆர்யன் கானை விசாரிக்க போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அனுமதி கோரியிருந்தது.

விருந்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் கப்பல் உரிமையாளருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஆர்யன் கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போதைப்பொருள் பயன்படுத்துவோரிடம் விசாரித்தால்தான் விநியோகம் செய்பவர்களை கண்டுபிடிக்க முடியும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் நேற்று கைது செய்யப்பட்டார்.