இந்தியா

ம.பி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகன்; முழு கவச உடை அணிந்து திருமணம்

ம.பி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகன்; முழு கவச உடை அணிந்து திருமணம்

Sinekadhara

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், நோய் தடுப்பு கவச உடைகளை அணிந்தபடி திருமணம் செய்து கொண்டார்.

ரத்லம் பகுதியைச் சேர்ந்த நபருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இருப்பினும் நிச்சயிக்கப்பட்ட நாளிலேயே திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மணமகனும், மணமகளும் பிபிஇ கிட் அணிந்தபடி திருமணம் செய்துகொண்டு, அக்னியை வலம் வந்தனர். முன்னதாக, மணமகனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் திருமணத்தை தடுப்பதற்காக அப்பகுதி அதிகாரிகள் வந்தனர். பின்னர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திருமணம் நடத்த அனுமதித்தனர்.