இந்தியா

வீட்டில் சடலமாக கிடந்த தம்பதியர், 3 குழந்தைகள்: போலீசார் விசாரணை.!

வீட்டில் சடலமாக கிடந்த தம்பதியர், 3 குழந்தைகள்: போலீசார் விசாரணை.!

Sinekadhara

குஜராத்தில் ஒரு தம்பதியர் தனது மூன்று குழந்தைகளுடன் சடலமாக கிடந்தனர். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

சைஃபுதீன் துதைவாலா(42வயது), மஹேஜபீன்(35 வயது), அராவா மற்றும் சைனாப்(இருவருக்கும் 16 வயது), ஹுசைனா(7 வயது) ஆகிய ஐந்து பேரும் சுஜை பாங் பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டில் பிணமாகக் கிடந்தனர் என தாஹோத் நகர் காவல்நிலைய துணை ஆய்வாளர் ஹெச்.பி.கரண் கூறியுள்ளார்.

துதைவாலாவின் வயதான பெற்றோர் தங்கள் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மறுநாள் காலை திரும்பியபோது, தனது மகன் குடும்பமே இறந்துகிடப்பதைக் கண்டதாக போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் விசாரித்தபோது, வியாழக்கிழமை மாலை - வெள்ளிக்கிழமை காலைக்கு இடைப்பட்ட நேரத்தில் தண்ணீர் அல்லது குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்திருக்கலாம் என சந்தேகிப்பதாக கரண் கூறியுள்ளார்.

துதைவாலாவின் தந்தை ஷபிர் கூறுகையில், அளவுக்கதிகமான கடன் பிரச்னையால்தான் தன் மகன் இந்த முடிவை எடுத்திருப்பார் எனக் கூறியுள்ளார். ஆனால் போலீஸார் வேறு காரணம் இருக்கலாம் என போலீஸ் சந்தேகிப்பதாக துணை ஆய்வாளர் ஹெச்.பி.கரண் தெரிவித்துள்ளார்