இந்தியா

மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கணவரை நிர்பந்திக்க முடியாது: உச்சநீதிமன்றம்

Rasus

மனம் ஒத்துபோகாத மனைவியுடன் இணைந்து வாழுமாறு கணவரை நீதிமன்றங்கள் நிர்பந்திக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் தெரிவித்த சமரச ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த ஒரு கணவருக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்திருந்தது. இதைஎதிர்த்து அந்த கணவன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மனைவியின் உடனடித் தேவைகளை சந்திக்க 10 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தும்படி கணவனுக்கு உத்தரவிட்டது. 4 வாரத்திற்குள் பணத்தை செலுத்தவேண்டும் எனக் கூறி முன் ஜாமினும் வழங்கியது.
இந்தப் பணத்தை மனைவி தனது தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய நபர் மீது அவரது மனைவி போலீஸில் வரதட்சணை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார் தெரிவித்திருந்தார். காவல்துறை நடவடிக்கையை தவிர்ப்பதற்காக மனைவியுடன் சமரச ஒப்பந்தம் செய்துகொண்ட கணவன் அந்த ஒப்பந்தத்தின்படி மனைவியையும், குழந்தையையும் தம்முடன் அழைத்துச் செல்லவில்லை என தெரிகிறது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கணவனுக்கு அளித்திருந்த முன்ஜாமினை ரத்த செய்து
உத்தரவிட்டிருந்தது.