ஒரு காலத்தில் வெறும் 20 ஆயிரம் ரூபாயாக இருந்த மகா கும்பமேளா செலவு தற்போது 7,500 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா வருகிற ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்குகிறது. புகழ்பெற்ற இந்து மத விழாக்களில் ஒன்றான இந்த கும்பமேளாவில் பங்கேற்று, கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடுவதற்காக இம்முறை சுமார் 40 கோடி மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவுக்கு மொத்தம் 7,500 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1882-ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவுக்கு வெறுமனே 20 ஆயிரம் ரூபாய்தான் செலவானதாகவும், படிப்படியாக அது அதிகரித்து இப்போது பல்லாயிரம் கோடியாகிவிட்டது என்றும் வரலாற்று பேராசிரியர் யோகேஸ்வர் திவாரி கூறியிருக்கிறார்.