இந்தியா

இந்தியாவிலும் கொரனா... கேரள மாணவருக்கு பாதிப்பு

Rasus

சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரனா வைரஸ் சீனாவையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அங்கு 20 நகரங்களை சேர்ந்த மக்கள் முடக்கப்பட்டுள்ளதால் இது நாட்டின் பொருளாதாரத்தையுமே பதம் பார்த்துள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என சீனாவை சேர்ந்த ஆய்வாளர்களே எச்சரிக்கின்றனர்.

சீனாவிலிருந்து பரவி வரும் கொரனா வைரஸ் இதுவரை 17 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்நிலையில் கொரனா வைரஸின் பாதிப்பு இந்தியாவுக்கும் பரவியிருக்கிறது. சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான மாணவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் வுஹான் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கேரள மாணவர் அண்மையில் தாயகம் திரும்பினார். இந்நிலையில் அவருக்கு கொரனா தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.