இந்தியா

நாம் தேர்ந்தெடுத்த பாதை மிகச் சரியானது: பிரதமர் மோடி

நாம் தேர்ந்தெடுத்த பாதை மிகச் சரியானது: பிரதமர் மோடி

webteam

ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகளை பிற நாடுகள் பாராட்டி வருகின்றன என்றார். கொரோனா பரவலை தடுக்க தனி மனித இடைவெளி முக்கிய பங்கு வகிக்கிறது என்ற அவர், பிற நாடுகளை விட இந்தியாவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது எனத் தெரிவித்தார்.

நாம் தேர்ந்தெடுத்த பாதை மிகச் சரியானது எனவும் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.