இந்தியா

ஊரடங்கு முழுவதுமாக அமலுக்கு வந்தால் என்னவெல்லாம் கிடைக்கும்? என்னவெல்லாம் கிடைக்காது?

ஊரடங்கு முழுவதுமாக அமலுக்கு வந்தால் என்னவெல்லாம் கிடைக்கும்? என்னவெல்லாம் கிடைக்காது?

webteam

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. எனவே பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தியாவை பொருத்தவரை வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பெரிய கடைகள் உள்ளிட்டவைகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பல்வேறு மாவட்டங்களையும் முடக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அந்தவகையில், தமிழகத்தை பொருத்தவரை சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 3 மாவட்டங்களில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கை கடுமையாக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஊரடங்கை மீறுவோர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முழுவதுமாக அமலுக்கு வந்தால் என்னவெல்லாம் கிடைக்கும்? என்னவெல்லாம் கிடைக்காது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களின் பட்டியலை அரசாங்கம் அறிவித்துள்ளது, அவை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

அவை
1.உணவு மற்றும் பொருட்கள்
2.மருத்துவ பொருட்கள்
3.செய்தித்தாள், ஏடிஎம்,பெட்ரோல், டீசல் போன்ற இதர சேவைகள்
4.மின்சாரம், தண்ணீர், சிலிண்டர் போன்ற வீட்டிற்கு தேவையான சேவைகள்

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் மேற்கண்ட பிரிவுகள் தட்டுபாடின்றி கிடைக்கும் எனத் தெரிகிறது. 


எவை இயங்கும்?

உணவு விற்பனை நிலையங்கள், ரேஷன் கடைகள், பால் விற்பனை செய்யும் கடைகள், காய்கறிகள், மளிகை பொருட்கள், இறைச்சி, மீன் மற்றும் பழங்கள், சந்தைகள் மற்றும் சமையல் எரிவாயு, அத்தியாவசிய பொருட்களுக்கான போக்குவரத்து,போலீஸ்,தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள்

தபால் சேவைகள்,மின்சாரம், நீர் மற்றும் நகராட்சி சேவைகள்

வங்கிகள் / ஏடிஎம்கள், தொலைத் தொடர்பு சேவைகள். வங்கிகள் பண வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல், அரசாங்க பரிவர்த்தனைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை மட்டுமே வழங்கும். மொபைல் மற்றும் இணைய வங்கி சேவைகள்

வீட்டு உணவு, மருந்தகங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்,விவசாயம், பட்டு வளர்ப்பு, தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, மீன்வளம் தொடர்பான கடைகள் மற்றும் சந்தைகள், உணவங்களில் இருந்து உணவுகளை வாங்கிச் செல்லும் முறை, அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் கேண்டீன் சேவைகள்

எவை இயங்காது?

  • வணிக நிறுவனங்கள், பட்டறைகள், அத்தியாவசிய சேவைகள் அல்லாத வணிகம் சார்ந்த குடோன்கள்
  • தொழிற்சாலை சார்ந்த தனியார் நிறுவனங்கள் குறைந்த அளவு ஊழியர்களை சரியான இடைவெளியுடன் வேலை செய்ய அனுமதித்தல்
  • ஐடி போன்ற நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதித்தல்
  • ஏசி பேருந்துகள்
  • கொரோனா பாதிப்புக்குள்ளான மாநில, மற்றும் மாவட்டங்கள் இடையே எந்த சேவையும் இயக்கப்படாது