இந்தியா

கொரோனாவால் மேலும் ஒரு மரணம் : இந்தியாவில் உயிரிழப்பு 5ஆக உயர்வு

கொரோனாவால் மேலும் ஒரு மரணம் : இந்தியாவில் உயிரிழப்பு 5ஆக உயர்வு

webteam

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 5ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இந்தியாவில் கொரோனாவிற்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை 4 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த 63 வயது முதியவர் 5வது நபராக இந்தியாவில் உயிரிழந்துள்ளார்.

முன்னதாக, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் அறிவுரையை ஏற்று இந்தியா முழுவதும் மக்கள் இன்று சுய ஊரடங்கைக் கடைப்பிடித்து வருகின்றனர். மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முழு நேரப் பணியில் களமிறங்கியுள்ளனர்.