இந்தியா

கொரோனா வைரஸ்: இந்தியாவில் உயிரிழந்தோரில் 69 சதவிதம் பேர் ஆண்கள்

jagadeesh

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 69 சதவிதம் பேர் ஆண்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் கணிசமாக அதிகரித்திருந்தாலும் தொற்று உறுதி ஆவோரின் விகிதம் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 69 சதவிகிதம் பேர் ஆண்கள் என்றும் 31 சதவிதம் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்தோரில் 60 சதவிகிதத்தினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மக்கள் தொகையில் 10 லட்சம் பேரில் 600 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொற்று உறுதியாவோர் விகிதம் 11 சதவிகிதமாக இருந்ததாகவும் அது தற்போது 8 சதவிகிதமாக குறைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.