இந்தியா

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மறதி உள்ளிட்ட நீண்ட கால பாதிப்புகளை சந்திக்கின்றனர் - ஆய்வு!

webteam

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 20 சதவிகிதம் பேர் நீண்ட கால அளவில் உடல் நல பாதிப்புகளை சந்தித்து வருவது உலகளாவிய ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார், கொரோனா குணமான பின்பும் சிலர் களைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், மறதி, தூக்கமின்மை, இருமல், நெஞ்சு வலி, சுவை அறியாமை உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை தருவது குறித்து மருத்துவர்களுக்கு விரிவான அறிவுரை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.