இந்தியா

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகம்: மத்திய அரசு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகம்: மத்திய அரசு

webteam

தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒட்டுமொத்தமாக தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா நேர்மறை சதவிகிதம் 23.7%ஆகவும் புதுச்சேரியில் 42.3%ஆகவும் உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.