இந்தியா

கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா நோய்த் தொற்று !

kaleelrahman

கேரளாவில் 1,530 பேருக்கு கொரோனா! நான்காம் நாளாக 1,500 கடந்த பாதிப்பு 45 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு
கேரளாவில் நான்காம் நாளாக 1,500ஐ கடந்து ஞாயிற்றுக்கிழமை 1,530 பேருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் நாளாக பாதிப்பு 1,500 கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 45ஆயிரத்தை நெருங்குகிறது.


கேரளாவில் பகொரோனா தொற்று நான்காம் நாளாக 1,500ஐ கடந்து ஞாயிற்றுக்கிழமை 1,530 ஆக பதிவாகியுள்ளது. அதில் 1,351 பேருக்கு தொடர்புகளால் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 100 பேருக்கு தொற்றின் பிறப்பிடம் கண்டறியப்படவில்லை.


இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆயிரத்தை கடந்து 44,344ஆக அதிகரித்துள்ளது. தற்போது 15,310 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,099 பேர் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். இன்று 10 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.


இதுவரை மாநிலத்தில் மொத்தமாக 28,878 பேர் குணமடைந்துள்ளனர். தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 39 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து இடுக்கியில் 298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,278 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 977 பேர் குணமடைந்துள்ளனர். மூன்று உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.