கொரோனா பரவலால் நெருக்கடியை சந்தித்துள்ள இந்தியாவிற்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
கொரோனாவின் இரண்டாவது அலை பரவலின் காரணமாக இந்தியாவில் அதிகரித்துள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், சிகிச்சைக்கான உதவிகளை செய்யவும் பல்வேறு நாடுகள் முன் வந்துள்ளன. கொரோனா தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல, ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவையான உபகரணங்களை வழங்க பிரான்ஸ் முன்வந்துள்ளது. இந்தியாவிற்கு தேவையான மருத்துவ வசதிகளையும் ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவையான உதவிகளையும் வழங்குவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. இதேபோல, சிங்கப்பூர், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உதவ முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.