புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு போதுமான மருந்துகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வழங்கவும், நோய்த்தொற்று சதவீதம் அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்து கொண்டு இருப்பது ஆபத்தான கட்டத்தையே காட்டுவதால் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும்” என்று ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தியுள்ளார்
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், “புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அங்கேயும் போதுமான மருந்துகள் மருத்துவம் அளிக்கப்படவில்லை என்று மக்கள் மத்தியில் புகார் நிலவுகிறது. ரெம்டிவிசர் போன்ற மருந்துகள் கையிருப்பில் இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே ஜிப்மர் மருத்துவமனைக்கு போதுமான மருந்துகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்” என்று வலியுறுத்துவதாக தெரிவித்த ரவிக்குமார்.
புதுச்சேரியின் நோய்த்தொற்று சதவீதம் அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்து கொண்டு இருக்கிறது. இப்பொழுது ஏறத்தாழ 20 சதவீதம் தொற்று பாதிப்பு உள்ளது, நாளொன்றுக்கு ஆயிரம் பேர் இங்கே புதிதாக தொற்று பாதிக்கும் நிலைக்கு சென்று விட்டது. இது மிகவும் ஆபத்தான ஒரு கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதே காட்டுகிறது. முதல் சனி ஞாயிறு ஊரடங்கு மட்டுமே போதாது. இன்னும் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை இங்கே மாநில அரசு எடுக்க வேண்டும். மக்களும் இதற்கு புரிந்துகொண்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் அரசாங்கம் நிர்ப்பந்தித்து செய்ய வேண்டிய வேலை அல்ல தங்களுடைய உயிர்களை காப்பாற்றி கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் மக்களுக்கு இருக்கிறது. எனவே, அரசு சொல்லுகிறபடி தடுப்பூசி போட்டுக் கொள்வது, முககவசம் அணிவது கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, என்ற நடைமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லாமல் பொது இடங்களுக்கு வரக்கூடாது அதுபோல மக்கள் நடந்து கொள்ள வேண்டும்” என்று ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.