இந்தியா

கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 18 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

kaleelrahman

கேரளாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை போலவே அண்டை மாநிலமான கேரளாவிலும் கொரோனா நோய்த் தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் 22-ம் தேதி வரை மூவாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வந்த தொற்று, தற்போத ஆயிரத்தின் மடங்காக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி 16 ஆயிரத்தை கடந்த தொற்று, 16-ஆம் தேதி இன்று 18 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை 59,314 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 18,123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கேரளாவில் இதுவரை நோய் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்து 50,832ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் 99.69 சதவீதம் பேர் முதல் தவணையும் 82 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தி உள்ள நிலையில், கொரோனா பரவலின் வேகத்தாலும், தினம் தினம் ஆயிரம் ஆயிரமாக அதிகரித்து வரும் நோய்த் தொற்றாலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.