இந்தியா

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

jagadeesh

இந்தியாவில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கேரளா , மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை உயர்வதே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கடந்த 111 நாட்களில் இல்லாத வகையில் நேற்றைய தினம் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்தது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை உயர்ந்து, ஒரு நாள் கொரோனா பாதிப்பு 43,733 ஆக பதிவாகியுள்ளது.

இதில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 47,240 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 2 கோடியே 97 லட்சத்து 99 ஆயிரத்து 534 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் 4 லட்சத்து 59 ஆயிரத்து 920 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் 930 பேர் உயிரிழந்திருப்பதால் மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 4 ஆயிரத்து 211ஆக அதிகரித்துள்ளது.