(கோப்பு புகைப்படம்)
புதுச்சேரியில் சுப நிகழ்ச்சிக்கு சென்ற சோரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சோரியாங்குப்பம் கிராமத்தில் சுகாதாரத்துறை ஊழியர்கள் முகாமிட்டு தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர்.
புதுச்சேரியில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வரும் நிலையில், கடந்த வாரம் குருவிநத்தத்திலுள்ள மண்டபத்தில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்று வந்த சோரியாங்குப்பத்தை சேர்ந்த சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில், கடந்த 5 நாட்களில் 23 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து பாகூர் சுகாதார நிலையத்தினர் இக்கிராமத்துக்குச் சென்று தொடர் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் இருக்கின்றனர், மேலும் இன்று இரண்டு மருத்துவக் குழு சென்று கிராமப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் பரிசோதனை செய்ய உள்ளனர்.
இதையும் படிக்கலாம்: திருத்துறைபூண்டி: அரசுப் பள்ளியில் மற்றொரு மாணவருக்கு கொரோனர் அச்சத்தில் மாணவர்கள்