இந்தியா

கம்பளிப்பூச்சியை பார்த்து மனிதர்களை போலவே பயப்படும் கொரில்லா: வைரலாகும் வீடியோ!

கம்பளிப்பூச்சியை பார்த்து மனிதர்களை போலவே பயப்படும் கொரில்லா: வைரலாகும் வீடியோ!

sharpana

மனிதர்கள் போலவே கொரில்லா ஒன்று அதன் குழந்தையுடன் தன் மீது ஏறிய கம்பளிப்பூச்சியை தள்ளிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூச்சி இனங்களில் பலவகை இருந்தாலும் கம்பளி பூச்சி, தேனி போன்றவற்றிற்குதான் மக்கள் பயப்படுவார்கள்.

காரணம் இரண்டுமே உடம்பில் பட்டால் சேதாரம் நமக்குதான். அதுவும், கம்பளிப்பூச்சி உடம்பில் பட்டால் அரிப்பு ஏற்படுவதோடு உடம்பு முழுக்க தடிப்பு தடிப்பாக ஆகிவிடும். முருங்கை மரங்களில் அதிகம் கூட்டம் கூட்டமாக ஒட்டியிருக்கும் கம்பளிப்பூச்சிக்கு பயந்துகொண்டே மக்கள் சோப்பை கரைத்து ஊற்றுவார்கள். மக்களே பயப்படும் கம்பளிப்பூச்சிக்கு விலங்குகள் பயப்படாமல் இருக்குமா?

அப்படியொரு வீடியோவைத்தான் இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோவில், கம்பளிப்பூச்சி நகர்ந்து தங்கள்மீது படர வருவதை கொரில்லாவும் அதன் குழந்தை கொரில்லாவும் உற்று கவனிக்கின்றன. குறிப்பாக குட்டி கொரில்லாவும் குனிந்து பார்ப்பது க்யூட் சொல்ல வைக்கிறது. இறுதியில் கம்பளிப்பூச்சி கொரில்லா மீது ஏறியவுடன் அது பிடித்து தள்ளுகிறது.