இந்தியா

மாடலைக் கொன்றது இதற்குத்தானா? மாணவன் பரபரப்பு வாக்குமூலம்!

webteam

மும்பையில் மாடல் கொன்று சூட்கேஸுக்கு அடைத்து வீசியது ஏன் என்பது பற்றி கைதான மாணவன் பரபரப்பு வாக்குமூலம் தெரிவித்துள்ளான்.

ராஜஸ்தான் மாநிலம் கோடாவை சேர்ந்தவர் மான்சி தீக்‌ஷித். வயது 20. மாடல் ஆகும் ஆசையில் இருந்தவர். இவருக்கு மும்பையில் பி.காம் படித்துக்கொண்டிருக்கும் முஸாமில் சையத் (19) என்பவர் தொடர்பு, பேஸ்புக் மூலம் கிடைத்தது. சையத், ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு வந்தவர். இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். அப்போது தன்னை பிரபல புகைப்பட கலைஞர் என்றும் தன்னிடம் புகைப்படம் எடுத்த பலர் இப்போது மாடலிங்கில் ஜொலிப்பதாகவும் கூறியுள்ளார். இதை நம்பியிருக்கிறார் மான்சி. 

இந்நிலையில் மும்பை அந்தேரியில் உள்ள தனது வீட்டுக்கு மான்சியை அழைத்துள்ளார் சையத். வந்தார் மான்சி. அப்போது புகைப்படம் எடுப்பது பற்றி இருவரும் பேசியுள்ளனர். பின்னர் உடைகளை மாற்றி வருமாறு கூறியுள்ளார் சையத். 

உள் அறைக்குச் சென்று உடை மாற்றினார் மான்சி. அப்போது மறைவாக வைத்திருந்த கேமரா மூலம் அதை ரகசியமாக படம் பிடித்துள்ளார் சையத். பின்னர் போட்டோ ஷூட் போல ஏமாற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் மான்சிக்கு இது பொய் வேலை என்பது தெரியவந்தது. அப்போது சையத்தும் தான் புகைப்படக் கலைஞர் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமான மான்சி, தன்னை ஏமாற்றிவிட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உன்னை போலீசில் புகார் செய்வேன் என்று கூறி யுள்ளார். அப்போது, ’நீ உடை மாற்றும் புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது. இதை ஆன்லைனில் பரப்பிவிடுவேன். என்னுடன் உல்லாசமாக இரு’ என்று மிரட்டியுள்ளார் சையத். மறுத்த மான்சி, அவருடன் சண்டை போட்டுவிட்டு வெளியேற முயன்றுள்ளார். அப்போது மான்சியை பிடித் து இழுத்து கயிறால் கழுத்தை இறுக்கிக் கொன்றுள்ளார். பின்னர் சூட்கேஸுக்குள் உடலை அடக்கி, ஓலா காரை வாடகைக்கு அமர்த்தி மலாடு அருகே வீசிச் சென்றுள்ளார்.

அந்த ஓலா டிரைவர், அடுத்த சில நிமிடங்களிலே அதே இடத்துக்குத் திரும்பி வந்து பார்த்தார். சையத் கொண்டு வந்த சூட்கேஸ் ஓரத்தில் கிடப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார். அவர்கள் விரைந்து வந்து திறந்து பார்த்தனர். உள்ளே இளம் பெண்ணின் உடல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்த உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அங்குள்ள சிசிடிவி கேமராவை பரிசோதித்தனர். அப்போது சையத், சூட்கேஸை போட்டுவிட்டு ஆட்டோவில் தப்பிச் செல்லும் காட்சிப்பதிவுகள் கிடைத்தன. விரைந்து செயல்பட்ட போலீசார், அந்த ஆட்டோவை விரட்டிச் சென்று சையத்தை அமுக்கினர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒவ்வொரு முறையில் ஒவ்வொரு தகவலை சொல்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதலில், அவர் கூறியதாக போலீசார் கூறும்போது, ‘வீட்டுக்கு வந்த மான்சியை தகாத உறவில் ஈடுபட அவரை அழைத்தேன். அவர் மறுத்தார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் கோபமாக பேசியதால், அருகில் இருந்த ஸ்டூலை எடுத்து தாக்கினேன். மயக்கமானார். பிறகு பயந்து போய், தண்ணீரை தெளித்து உசுப்பினேன். அவர் மயக்கம் தெளிந்தது. சிறிது நேரத்தில் அம்மா வந்து கேட்டால் என்ன சொல்வது என்று பயம் ஏற்பட்டது. இதனால் கொலை செய்ய முடிவு செய்து கயிறால் கழுத்தை இறுக்கிக் கொன்றேன். பிறகு சூட்கேஸுக்குள் உடலை அழுக்கினேன்’ என்று தெரிவித்திருந்தார். 

அவரிடம் போலீசார் மேலும்  விசாரித்து வருகின்றனர்.