இந்தியா

காங். முன்னாள் எம்.பியை நோக்கி துப்பாக்கியை காட்டிய காவலர்

காங். முன்னாள் எம்.பியை நோக்கி துப்பாக்கியை காட்டிய காவலர்

webteam

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்நாத்தை நோக்கி, துப்பாக்கியை காட்டிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப்பிரதேசம் தலைநகர் போபாலில் இருந்து சுமார் 320 கி.மீ தொலைவில் உள்ள நாடாளுமன்ற தொகுதி சிண்ட்வாரா. இங்குள்ள விமானநிலையத்திற்கு காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்நாத் வந்தார். அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் ரத்னேஷ் பவார், கமல் நாத்தை நோக்கி துப்பாக்கியை எடுத்து காட்டியுள்ளார். அப்போது அருகில் இருந்த இரண்டு காவலர்கள் அவரை தள்ளிவிட்டு துப்பாக்கியை பறித்துவிட்டனர். இந்த சம்பவத்தையடுத்து கமல்நாத் விமான நிலையத்தை விட்டு வெளியேறினார். 

இச்சம்பவத்தையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தனக்கு எதுவும் நினைவில்லை என தெரிவித்துள்ளார். ரத்னேஷ் பவார் கடந்த 2008 ஆம் ஆண்டில் காவல்துறையில் சேர்ந்துள்ளார்.