india
india  pt web
இந்தியா

இந்தியா கூட்டணி சார்பில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு - ராகுல், சோனியா இடம்பெறவில்லை

Angeshwar G

வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ் திமுக இடதுசாரிகள் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து ’இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. ஏற்கனவே இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவிலும் இரண்டாவது கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் நடைபெற்ற நிலையில், மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் லோகோ, கூட்டணிக்கான ஒருங்கிணைப்புக் குழு, 5 மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் போன்றவை குறித்து தீவிரமாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்திய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இக்கூட்டம் ஆளும் தரப்பையும் உற்று நோக்க வைத்துள்ளது.

இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பாக 13 பேரை கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை எதிர்க்கட்சிகள் கூட்டணி அறிவித்துள்ளது.

INDIAAlliance MKStalin

கே சி வேணுகோபால், சரத் பவர் உள்ளிட்டோர் இந்த ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் குழுவில் இடம் பெற்றுள்ளார். இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு

காங்கிரஸ்- கே.சி.வேணுகோபால்,

தேசியவாத காங்கிரஸ் - சரத் பவார்,

தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர்- மு.க.ஸ்டாலின்

திரிணாமுல் காங்கிரஸ் - அபிஷேக் பானர்ஜி

சிவ சேனா - சஞ்சய் ராவத்,

ராஸ்ட்ரிய ஜனதாதள கட்சி - தேஜஸ்வி யாதவ்,

ஐக்கிய ஜனதா தள கட்சி - லல்லன் சிங்,

ஆம் ஆத்மி - ராகவ் சத்தா,

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி - ஹேமந்த் சோரன்,

சமாஜ்வாதி கட்சி - ஜாதவ் அலிகான்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - டி ராஜா,

தேசிய மாநாட்டு கட்சியின் - உமர் அப்துல்லா,

பிடிபி கட்சி - மெகபூபா முப்தி

கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

1. இந்திய கட்சிகளாகிய நாங்கள் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாக போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம்

2. தொகுதி பங்கீடுகள் பொருத்தவரை அதற்கான பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கப்பட்டு கூடிய விரைவில் முடிக்கப்பட்டு விடும்

3. பொதுமக்களின் அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுக் கூட்டங்களை நடத்தி எடுத்துரைக்க முடிவு செய்துள்ளோம்

4. தகவல் தொடர்பு மற்றும் ஊடக உத்திகள் மூலமாக பிரச்சாரங்களை ஒருங்கிணைக்க முடிவு