இந்தியா

சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் 2 வது முறை உயர்வு

சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் 2 வது முறை உயர்வு

webteam

சமையல் எரிவாயுவின் விலை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளன.

சமையல் எரிவாயு விலை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் மானிய சமையல் எரிவாயு விலை உயர்வால், சென்னையில் ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயு 493 ரூபாய் 87 காசுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.மேலும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 60 ரூபாய் விலை உயர்ந்திருந்தது.

இந்நிலையில் வினியோகஸ்தர்கள் கமிஷன் அதிகரிப்பால், இப்போது சிலிண்டர் விலை 2 ரூபாய் மேலும் உயர்ந்துள்ளது. வீட்டு உபயோகத் துக்கு மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ சிலிண்டருக்கான வினியோகஸ்தர் கமிஷன் தொகையை 50 ரூபாய் 58 காசாகவும், 5 கிலோ சிலிண்டருக்கான கமிஷன் தொகையை 25 ரூபாய் 29 காசாகவும் பெட்ரோலிய அமைச்சகம் அதிகரித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையை நேற்று 2 ரூபாய் உயர்த்தியுள்ளன. இதையடுத்து சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை, மானியம் நீங்கலாக ரூ.495.39 ஆக அதிகரித் துள்ளது. ரூ.505.34 ஆகவும், மும்பையில் ரூ505.05 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.510.70 ஆகவும் உயர்ந்து உள்ளது.

கடந்த 1 ஆம் தேதி,  14.2 கிலோ எடையுள்ள கியாஸ் சிலிண்டரின் சந்தை விலை ரூ.60 அதிகரித்து ரூ.939 ஆக இருந்தது. தற்போது இந்த விலை ரூ.942.50 ஆக உயர்ந்துள்ளது.