இந்தியா

கேரள பட்ஜெட் புத்தகத்தில் காந்தி கொல்லப்பட்டதை சித்தரிக்கும் படம்

கேரள பட்ஜெட் புத்தகத்தில் காந்தி கொல்லப்பட்டதை சித்தரிக்கும் படம்

webteam

கேரள அரசின் பட்ஜெட் உரையின் முகப்பு பக்கத்தில் காந்தி படுகொலையை சித்தரிக்கும் வகையிலான புகைப்படம் இடம் பெற்றிருந்தது பேசு பொருளாக மாறியுள்ளது.

இது குறித்து பேசிய கேரள நிதியமைச்சர் ஐசக், இது கேரள ஓவியர் வரைந்த ஓவியம் தான் எனவும், காந்தி‌யை படுகொலை செய்தவர்களை மறக்க மாட்டோம் என்பதை இந்தப் புகைப்படத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் கூறினார்.

குடியுரிமை திருத்தச்சட்டம், தேசியகுடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட விவகாரங்களில் கேரள அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதைத்தொடர்ந்து அம்மாநில சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் காந்தி படுகொலை தொடர்பான ஓவியம் கேரள பட்ஜெட் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.