இந்தியா

தொடரும் ஆர்.எஸ்.எஸ் - சி.பி.எம் மோதல்: ஆக.6 அனைத்துக்கட்சி கூட்டம்

webteam

கேரளாவில் ஆர்எஸ்எஸ் தொண்டர் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க வரும் 6 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இது தவிர கண்ணூர், திருவனந்தபுரம், கோட்டயம் ஆகிய இடங்களில் அமைதிக்கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் கும்மணம் ராஜசேகரன், முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜகோபால் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோபாலன்குட்டி, சி.பி.எம் மாநில தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் - மார்க்சிஸ்ட் அலுவலகங்கள் மீது இன்று புதிதாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கோட்டயத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் மீது, பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரே காரணம் என, பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு பதிலடியாக, திருநக்காரா நகரில் உள்ள சி.ஐ.டி.யூவின் வர்த்தக பிரிவு அலுவலகத்தில் கல் வீசி சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர்.