இந்தியா

வெடிகுண்டுக்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்கள் திருப்பதியில் பறிமுதல்

வெடிகுண்டுக்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்கள் திருப்பதியில் பறிமுதல்

webteam

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரை செல்லும் ஸ்ரீவாரி மெட்டு மலையடிவாரத்தில் வெடிகுண்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரை செல்லும் ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் ஒரு பையில் வெடிகுண்டு வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள், பழைய செல்போன், பயன்படுத்தாத வாக்மேன் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த  ஐ.ஜி. காந்தாராவ் ஆய்வு மேற்கொண்டார். திருப்பதி கோயிலுக்கு 3 கிலோமீட்டர் தூரத்தில் வெடிகுண்டுக்கு தேவையான பொருட்கள் வைக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.