இந்தியா

ஆகஸ்ட் 10 -ல் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

webteam

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலர் கூறியும் அதை ஏற்க மறுத்துவிட்டார் ராகுல் காந்தி.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், வரும் 10 ஆம் தேதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை யகத்தில் நடைபெறுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்த பின் நடக்கும் இந்தக் கூட்டத்தில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.