மகாராஷ்டிராவில் நாளைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்விராஜ் சவான் வரவேற்றுள்ளார்.
மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதாவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் நாளை மாலை ஐந்து மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு திருப்திகரமாக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்விராஜ் சவான் கூறியிருக்கிறார். நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால் காலை 11 மணிக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.