இந்தியா

ஏழை தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் கட்சி ‘SpeakUp’ பிரச்சாரம்!

ஏழை தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் கட்சி ‘SpeakUp’ பிரச்சாரம்!

webteam

ஏழை மக்களுக்கும், வெளிமாநில தொழிலாளர்களுக்கும், சிறு குறு விவசாயிகளுக்கும் , நடுத்தர மக்களுக்கும் குரல் கொடுப்பதற்காக ‘SpeakUp’ என்ற பிரச்சாரத்தைக் காங்கிரஸ் முன்னெடுக்கவுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள அஜய் மேகன், கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் ஆன்லைன் பிரச்சாரத்தை நாளை காலை 11 மணி முதல் 2 மணி வரை நடத்தவுள்ளனர். வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாகச் சொந்த ஊர்களுக்குச் செல்ல போக்குவரத்து வழி செய்ய வேண்டும், அவர்களின் வேலை நாட்களை 200ஆக உயர்த்த வேண்டும், சிறு தொழில்களுக்கான நிதி தொகுப்பு உள்ளடங்காமல், ஏழைகளுக்கு உடனடி நிதி உதவி ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளோம்.

இதுகுறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப்பிரிவு தலைவர் ரோகன் குப்தா,கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் அவரவர்களுடன் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா, யூடியூப் என அனைத்து சமூக வலைத்தளங்களின் மூலம் ஏழைகளுக்காகக் குரல் கொடுக்கலாம். வெளிமாநில தொழிலாளர்களுக்கும், சிறு குறு விவசாயிகளுக்கும் , நடுத்தர மக்களுக்கும் ஆதரவு தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.