சிவசேனா ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் அதிக இடங்களை பெற்ற கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய ஆதரவு கிடைக்காததால் பாஜக அதனை நேற்று நிராகரித்தது. இதனையடுத்து ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தையை நடத்தியது.
காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகா அர்ஜூனா கார்கே, முகுல் வாஷ்னிக், அகமது பட்டேல், ஏகே அந்தோனி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் சிவசேனா ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி வெளியே இருந்து ஆதரவு தர இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை கட்சி தலைமையிடம் வைத்துள்ளதாக தெரிகிறது.