இந்தியா

ட்விட்டரில் இருந்து வெளியேறிய குஷ்பூ ! காரணம் என்ன ?

ட்விட்டரில் இருந்து வெளியேறிய குஷ்பூ ! காரணம் என்ன ?

jagadeesh

சமூக வலைத்தளமான ட்விட்டரில் இருந்து தான் வெளியேறிவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளமான ட்விட்டரை அதிகமாக பயன்படுத்தும் பிரபலங்களில் குஷ்பூவும் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக ஆன பின்பு, முன்பை விட மிக வேகமாக ட்விட்டரை பயன்படுத்தி வந்தார். தன்னுடைய அரசியல் ரீதியான கருத்துகளையும் ட்விட்டர் பதிவுகள் மூலம் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் இன்று திடீரென குஷ்பூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் "ட்விட்டரில் அதிகளவில் எதிர்மறையான கருத்துகள் வருவதால் வெளியேறுவதாக கூறியுள்ளார் குஷ்பூ.