காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவரான சாம் பிட்ரோடா தாம் பயன்படுத்தும் கணினிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதை விடுவிக்க பல ஆயிரம் கோடி டாலர்களை கிரிப்டோகரன்சி மூலமாக கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் பேசியிருக்கும் பிட்ரோடா, தன்னிடம் உள்ள கணினிகள், செல்போன்கள் கடந்த சில வாரங்களாக முடக்கப்பட்டுள்ளது. ஹேக் செய்தவர்கள் தன்னை தொடர்புகொண்டு தன்னிடம் மிகப்பெரிய தொகையை கேட்டு மிரட்டுவதாகவும், தவறினால் பொது வெளியில் மிகப்பெரிய அவமதிப்பிற்குள்ளாக்கப்போவதாக மிரட்டுவதாகவும் பிட்ரோடா கூறியுள்ளார்.
மேலும், தன் பெயருடன் எந்த மின்னஞ்சல் வந்தாலும் அதை பொருட்படுத்தவோ, திறந்து பார்க்கவோ வேண்டாம் என்றும், அதில் தவறானவை இருக்கலாம் எனவும் கூறியுள்ளார். தற்போது தான் பயணத்தில் இருப்பதாகவும் சிகாகோ சென்ற பின் பிரச்சினைகளை சரி செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.