இந்தியா

“நாடாளுமன்ற நடவடிக்கையில் சிபிஐ தலையிடுகிறது” - சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்

சங்கீதா

சிபிஐயின் நடவடிக்கை தனது நாடாளுமன்ற செயல்பாடுகளில் நேரடியாக தலையிடுவதாக உள்ளது உள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறும் வகையில் உள்ள இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கார்த்திக் சிதம்பரம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது வீட்டில் அலுவல் சார்ந்த முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற உரிமை மீறலாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் முறையீட்டுள்ளார்.

மத்திய பாஜக அரசுக்கு எதிரான எனது குரலை ஒடுக்க வேண்டும் என்பதற்காக சிபிஐ அதிகாரிகளால் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எனது செயல்பாடுகளை தடுக்க சிபிஐ நினைப்பது ஜனநாயக மாண்புகள் மீதான தாக்குதல் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு சீன நாட்டைச் சேர்ந்த 263 பேருக்கு முறைகேடாக விசா பெற்றுத் தருவதற்காக ரூ.50 லட்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் கார்த்தி சிதம்பரம் சிபிஐ முன்பு விசாரணைக்காக ஆஜராகி வருகிறார். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.