காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவரும், எம்.பியுமான அகமது படேலின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அகமது படேல், குர்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது மகன் ஃபைசல் படேல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆனால் அகமது படேலின் உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்த ட்விட்டர் பதிவில் ஃபைசல் படேல் கூறியுள்ளார். விரைவில் அவர் குணமடைய கட்சியினரும், பொதுமக்களும் பிரார்த்தனை செய்யும்படியும், ஃபைசல் படேல் கேட்டுக் கொண்டுள்ளார்.