இந்தியா

பிரதமர் மோடியை கிண்டல் செய்து காங்கிரஸ் வீடியோ

பிரதமர் மோடியை கிண்டல் செய்து காங்கிரஸ் வீடியோ

Rasus

பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் மற்ற நாட்டு தலைவர்களை சந்திக்கும்போது பரஸ்பரம் வரவேற்று கொள்வது வழக்கம். அந்த சமயத்தில் கைகுலுக்கி வரவேற்பதையோ, அல்லது ஆரத்தழுவி வரவேற்பதையோ வழக்கமாக தலைவர்கள் கொண்டுள்ளனர். இந்நிலையில் மற்ற நாட்டு தலைவர்களை பிரதமர் வரவேற்று சந்திக்கும்போது எடுக்கப்பட்ட காட்சிகளை கிண்டல் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில், பிரதமர் மோடியிடம் இருந்து நிறைய அரவணைப்புகளை எதிர்பார்க்கலாம் எனவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.